கிளினிக் நிலையம் திறப்புவிழா
முந்தல்
பிரதேச
செயலகத்தின் புளிச்சக்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தாய் சேய் பரிசோதனை
நிலையமானது "2014 தயட கிருள"
வேலை திட்டத்தின்
கீழ் கெளரவ பெசில் ராஜபக்ச அவர்களின் நிதி
ஒதுக்கீட்டில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களின் மூலமாக ரூபா. 28 இலட்சம் ஒதுக்கப்பட்டு 2015.01.02 ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து ஊர்
மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அபூபக்கர் சித்தீக்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம
அதிதிகளாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் என்.டி.எம். தாஹிர், முன்னால்
மாகாண சபை
உறுப்பினர் அல்ஹாஜ் ஆப்தீன் எஹ்யா,
ஆராய்சிக்கட்டு
பிரதேச சபை உறுப்பினர் எஸ்.டி.எம். நிஜாம்தீன், ஆராய்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் சி.எம்.எம்.
சரிப், மற்றும் ஊர் மக்கள் கலந்துகொன்டனர்.
0 comments:
Post a Comment